Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

காட்டு நாய்களைக் கொல்ல அரசு முடிவு -அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த கனேடிய பெண்!

dingoes என அழைக்கப்படும் காட்டு நாய்களால் கொல்லப்பட்டாரா?

கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயம் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் அவுஸ்திரேலியாவின் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டார்.
பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் காட்டு நாய்கள் நின்றதால், அவர் அந்த நாய்களால் கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்தது.
உடற்கூறு ஆய்வில், அவரது உடலில் அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

என்றாலும், காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பைப்பர் கடற்கரையில் விழுந்து கிடந்தபோது அவரை காட்டுநாய்கள் சூழ்ந்து நின்ற விடயமும், அவை அவரை கடித்துக் காயப்படுத்திய விடயமும், அவுஸ்திரேலிய மக்களையும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

ஆகவே, அந்தக் காட்டு நாய்களைக் கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அந்தக் காட்டு நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் என அவுஸ்திரேலிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இதற்கு முன்பும் இந்த காட்டு நாய்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு ஒன்பது வயது பிள்ளை ஒன்றை இந்த காட்டு நாய்கள் குதறிக் கொன்றன.
அத்துடன், 1980ஆம் ஆண்டு, நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர விடயம் நடைபெற்றது. Azaria Chamberlain என்னும் இரண்டு வயதுக் குழந்தையை இந்த காட்டு நாய்கள் தாக்கிக் கொன்றுவிட்டன.

அந்த சம்பவத்தை மையமாக வைத்து, ‘A Cry in the Dark’ என்னும் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.