Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்ததை மறந்தே கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்அநுரகுமார!

,

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திருக்கின்றார். எனவே அதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிந்திருந்தமை சாதரணமானதாகும். இது ஒரு இரகசிய தகவல் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்5ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் விசேட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து கடந்த 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது சகல சமூக வலைத்தள பக்கங்களிலும் தன்னால் அன்றைய தினம் முன்னிலையாக முடியாது என்றும், 17ஆம் திகதி முன்னிலையாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது ஒரு பொதுத் தகவலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதன் ஊடாகவே அந்த தகவலை அறிந்திருப்பார். அவர் இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்ததை மறந்தே கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். மாறாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை. ரணில் ஆணைக்குழுவில் முன்னிலையாவது இரகசிய தகவல் அல்ல.

முன்னாள் ஜனாதிபதி ரணில் அவரது சமூக வலைத்தளங்களில் இந்த தகவலைப் பகிர்ந்த பின்னரே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அதனை விடுத்து இந்த விவகாரத்தில் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ எந்தவகையிலும் தலையிடவில்லை என்றார்.