Breaking News
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை; நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் தீர்மானமில்லை.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.