Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மின்சாரத் துறை மறுசீரமைப்புகள் குறித்து மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்!

சூரிய வலுசக்தி உள்ளிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கட்டமைப்புக்கு சேர்ப்பதில் காணப்படும் சிக்கல்கள்,

மின்சாரத் துறை மறுசீரமைப்புகள் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் 

இந்நாட்டின் மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் குறித்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில்  கலந்துரையாடப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா தலைமையில் 2025.06.13 ஆம் திகதி கூடிய இந்தக் குழுக் கூட்டத்தில் வலு சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மின்சார சபையின் பதில் தலைவர் பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை, மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

சூரிய வலுசக்தி உள்ளிட்ட மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கட்டமைப்புக்கு சேர்ப்பதில் காணப்படும் சிக்கல்கள், மின்சத்தி உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான முன்மொழிவுகள், இயற்கை திரவ வாயு (LNG) உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செலவை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அடிப்படை விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் எழுந்த விடயங்கள் மற்றும் மின்சக்தித் துறையிலான மறுசீரமைப்புகள் தொடர்பான அடிப்படைப் பிரேரணைகளை குழுவில் சமர்ப்பிக்குமாறு ஒவ்வொரு தரப்பினருக்கும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். 

இந்நாட்டின் வலுசக்தி உற்பத்திச் செலவை குறைக்கக்கூடிய முறைகளை பின்பற்றுவதற்கான நீண்டகால திட்டமொன்றுக்கு அமைய செயற்படுவதன் தேவையை குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதற்கும் சம்பந்தப்பட்ட பிரேரணையை அறிக்கை ஒன்றின் மூலம் பாராளுமன்றத்துக்கு முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். 

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹஷீம், நலீன் பண்டார ஜயமஹ மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.