Breaking News
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு! Facebook Twitter Pinterest
.
பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
இருபாலை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நபர் பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (28) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மரண விசாரணையின்போது, அவர் மன விரக்தியில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.