இலங்கைத் தீவில் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது.
குழந்தை பிறப்பு வீதத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி; குழந்தை பிறப்பு வீதத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
அதன்படி, கடந்த 10 வருடங்களுக்குள் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 இல் குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 304,105ஆக காணப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 292,216ஆக பதிவாகியுள்ளது.
அதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு இடையில் விலகும் வீதம் அதிகரித்துள்ளது.
இது அவ்வளவு இலகுவான ஒரு விடயம் அல்ல. நாளுக்கு நாள் விருவிருப்பான பல செய்திகள் ஊடகங்களில் இடம்பிடித்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு செய்திகளும் விடயங்களும் புதிதாக மாற மாற இவ்வாறான விடயங்கள் மறைந்து விடுகின்றன.
தற்போது நாட்டில் குழந்தைப் பிறப்பு வீதத்துக்கான முக்கிய காரணியாக நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகளவில் பங்களிப்பு செலுத்துகின்றது.
பொருளாதார நெருக்கடியின் காரணத்தால் பெற்றோர்கள் அப்பாவியான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைக்கு சிறந்த போஷாக்கு,சிறந்த பாடசாலை,சிறந்த கல்வி இது மூன்றையும் சரி வர வழங்குவது பெற்றோரின் தலையாய கடமையாக மாறியுள்ளது.
இருப்பினும் தற்போதைய நாட்டு நிலைமையுடன் ஒப்பிடும் போது பெற்றோர் பாரிய அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.
நவீன சமுதாயத்தில் தாய் , தந்தை இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இல்லையெனில் அவர்களால் தனது குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாது.
இந்நிலையில், இரண்டு மூன்று குழந்தைகளை பெற்று அவர்களை வளர்ப்பது பெற்றோருக்கு கனவாகவே உள்ளது. இவ்வாறான பின்னணியில் நாட்டின் சனத்தொகை மட்டுப்படுத்தப்படுகிறது. நாட்டினது எதிர்காலம் என்பது மட்டுப்படுத்தப்படுகிறது.
ஆகவே, இதற்கான சிறந்த ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும். கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு உணவுகளுடனான ஒரு பொதியை வழங்குவது மாத்திரம் இதற்கு தீர்வாக அமையாது.
பாடசாலை மாணவர்கள் இடையில் கல்வியை விட்டு விலகுவதை தடுத்து அவர்களின் தேவைகளை தாமே பூர்த்தி செய்துக் கொள்ளும் அளவுக்கு பொருளாதாரம் நிலையாக காணப்பட வேண்டும்.
ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சனத்தொகை குறைவடைகிறது எனில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் நிச்சயம் அதிகம்.