திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருக்கோணேச்சரத்துக்கு செல்லும் பாதையில் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அவ்விடத்தில் இருந்து நீக்கி அவர்களுக்கு மாற்று ஒழுங்கு செய்யவும்.
திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் அக்கறை எடுத்தல் வேண்டும் .சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத் தமிழர்களின் தலையாய கோவிலாகிய திருக்கோணேச்சரத்தை பாதுகாப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
திருக்கோணேச்சரத்துக்கு செல்லும் பாதையில் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அவ்விடத்தில் இருந்து நீக்கி அவர்களுக்கு மாற்று ஒழுங்கு செய்யவும்.கோணேச்சரத்துக்கு செல்லும் பக்தர்களின் புனித வழிபாட்டுக்கு உரிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
திருக்கோணேச்சர இடையூறுகளைச் திருப்பணிக்கு தொல்லியல் திணைக்களம் பல்வேறு செய்து வந்துள்ளது. இவ்விடையூறுகளை நிறுத்தி திருக்கோணேச்சரத்தின் பாரிய திருப்பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்து உதவுங்கள்.
திருக்கோணேச்சர புனித தீர்த்தமாகிய பாபநாசம் தீர்த்தக்கரையை புனருத்தாரணம் செய்து பொதுமக்கள் அவ்விடத்தில் தமது கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
திருக்கேதீச்சர ஆலயத்தை இந்திய அரசு கருங்கற் கோயிலாக புனர்நிர்மாணம் செய்தது போல் திருக்கோணேச்சரத்தையும் அழகாக நிர்மானிப்பதற்கு இந்திய அரசிடம் வேண்டுதல் விடுவிக்கப்பட்டது. அவர்கள் அக்கறையாக இருப்பதாக தகவல்கள் திரட்டினார்கள் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேற்படி விடயங்கள் தொடர்பாக மதிப்பார்ந்த ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு நன்றியோடு வேண்டுகிறோம் என்றுள்ளது.