Breaking News
26.11.2015 செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தன் உயிர் நீத்தார்-செந்தூரன்
.
தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக செங்கொடி உயிர் நீத்தார்
ஈழத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவன் செந்தூரன் உயிர் நீத்தார்.
செங்கொடி விருப்பம் நிறைவேறிவிட்டது. செந்தூரன் விருப்பம் எப்போது நிறைவேறும்?
(26.11.2015 செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தன் உயிர் நீத்தார்)
தன் மகன் தன்னை பிற்காலத்தில் பார்த்துக்கொள்வான் என்று செந்தூரனின் தாய் கனவு கண்டிருப்பார். தன் சகோதரன் தங்களை வாழவைப்பான் என்று செந்தூரனின் சகோதரிகள் நினைத்திருப்பார்கள். ஆனால் செந்தூரன் தன்னை பெற்று வளர்த்த தாயின் கனவை நினைக்கவில்லை. தன் கூடப் பிறந்த சகோதரிகளின் விருப்பத்தை நினைக்கவில்லை. அவனுடைய நினைவு எல்லாம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே.