இரவு பகலாக பயிற்சி செய்த சில்க் ஸ்மிதா: முதல் முறை அந்த பாடிய பாட்டு; வைரல் வீடியோ!
.
1980-ம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சில்க் சுமிதா. அதற்கு முன்பே 1979-ம் ஆண்டு மலையாளத்தில் 2 படங்களில் சில்சுமிதா தோன்றியுள்ளார்.
வண்டிச்சக்கரம் படத்தில், சாராயக்கடையில் கவர்ச்சி வேடத்தில் நடித்த சில்க் சுமிதா, அடுத்து பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அலைகள் ஓய்வதில்லை படம் சில்க் ஸ்மிதாவுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அவரின் நடிப்புக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்தது.
அதன்பிறகு ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சில்க் சுமிதா.
90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த சில்க் சுமிதா ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா, கடந்த 1996-ம் ஆண்டு சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் இறந்து இத்தனை வருடங்கள் கடந்தாலும், அவரைப்பற்றி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் நாள்தோறும் கருத்துக்களை பகிர்ந்து வருகினறனர் இன்றளவும் ரசிகர்கள் பேசிககொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் அவரை பற்றிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ள சில்க் ஸ்மிதா, படத்தில் ஒரு பாடல் கூட பாடவில்லை.
அதே சமயம், தான் பாடியே தீருவேன் என்று அடம் பிடித்து துபாயில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், பாடகர், மலேசியா வாசுதேவனுடன் இணைந்து ஒரு பாடலை சில்க் ஸ்மிதா பாடியுள்ளார்.
இந்த மேடையில் அவர் பாடல் பாடுவதற்கு முன்பாக பேசும் பாடகர் மலேசியா வாசுதேவன், அவங்க பாடனும்னு ஆசைப்பட்டு, மெட்ராஸிலேயே இந்த பாட்டை நான் ஸ்டேஜிலே கண்டிப்பா பாடுவேன் என்று வற்புறுத்தி, ரொம்ப சிரமப்பட்டு, ராத்தி பகல் தூங்காமல், பயிற்சி எடுத்து, இந்த மேடையில் பாட வந்துருக்காங்க.
அதுவும் முதல்முறையாக இவர் பாடல் பாடுவதை கேட்க இருப்பது உலகத்திலேயே துபாயில் தான்.
இவரது குரல் முதலில் ஒலிக்கப்போகும் இடம் துபாய் என்று சொல்ல, சில்ஸ் ஸ்மிதா பாடல் பாட தொடங்குகிறார். இந்த வீடி
இவரது குரல் முதலில் ஒலிக்கப்போகும் இடம் துபாய் என்று சொல்ல, சில்ஸ் ஸ்மிதா பாடல் பாட தொடங்குகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.