Breaking News
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு!
.

பீகார் மாநிலம் சிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் மகர் மற்றும் அவுரியா ஆகிய இடங்களில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த சூழலில், சிவான், சரண் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.