Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விடுதலை புலிகள் போராளிகளை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார்

சிங்களவர்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் ஏன் நினைவுகூரவில்லை ?

விடுதலை புலிகள் போராளிகளை நினைவுகூர்ந்த  சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும், இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லை.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்துக்கு எதிரான செயற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக  அமெரிக்கா கொண்டு வந்த 30/11 பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்கியது.இதன் பின்னரே இராணுவத்துக்கு எதிராக நெருக்கடிகள்  அதிகரித்தன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 30/1 பிரேரணையில் இருந்து விலகிய போதும்  அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது. இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்ன ?
விடுதலை புலிகள் போராளிகள் தற்போது பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகிறார்கள்.கடந்த வாரம் இடம்பெற்ற நினைவேந்தலில் பலர் பங்குப்பற்றியிருந்தார்கள்.வெள்ளையர்களும் கலந்துக் கொண்டார்கள்.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் விடுதலை புலிகள்  போராளிகளை நினைவு கூர்ந்தார்.இந்த யுத்தத்தில் சிங்களவர்களும் , இராணுவத்தினரும் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஏன் இவர்களை நினைவுகூரவில்லை.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுகிறார்.வியன்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறார்.யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சந்தித்து சுயநிர்ணயம் பற்றி பேசியுள்ளார். ஆகவே இவரது செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.