Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பத்தும்:- 31,03,2025 - கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்!

"அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்"

 கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்

கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின்  தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.  கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யுனியன்வில் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.

 ‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது!

பாதாள உலகக் கும்பல் தலைவரான ‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் திணைக்களஉயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.‘ரொடும்ப அமில’ என்ற நபர் கைது செய்யப்பட்டதை ரஷ்ய அரசாங்கம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்தஅதிகாரி கூறியுள்ளார்.

"அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார். 
குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். 
இருப்பினும், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அதில், "அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்... நான் எப்போதும்உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்..." என்று எழுதப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.