Breaking News
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் வன்முறைக் கருவியே அரசு என்றும் அடக்கி ஆளப்படும் வர்க்கம் அடக்கி ஆளும் வர்க்கத்தை தூக்கி எறியும் வன்முறை நிகழ்வே புரட்சி என்றும் காரல் மார்க்ஸ் கூறினார்.
.
ஜேவிபி உண்மையில் புரட்சியை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவர்கள் தேர்தல் பாதையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஒருபோதும் அனுமதிக்காது.மாறாக முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதித்தால் ஜேவிபியும் ஆளும் வர்க்கத்தில் ஒருவராக மாறிவிட்டது என்று அர்த்தமாகும்
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் வன்முறைக் கருவியே அரசு என்றும் அடக்கி ஆளப்படும் வர்க்கம் அடக்கி ஆளும் வர்க்கத்தை தூக்கி எறியும் வன்முறை நிகழ்வே புரட்சி என்றும் காரல் மார்க்ஸ் கூறினார்.ஆனால் இன்று தம்மை மார்க்சியவாதிகளாக சொல்லிக் கொள்ளும் சிலர் தேர்தல் பாதையில் பயணித்து வன்முறையின்றி புரட்சியை செய்ய முடியும் என கூறுகின்றனர்.இவர்கள் பற்றி லெனின் கூறுவது என்னவென்றால்,
"முதலாளித்துவ வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும் அதற்குப் பின் தான் அது அதிகாரத்தை பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான்; கூறுவார்கள். வர்க்கப் போராட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையில் பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும்" இலங்கையில் தேர்தலில் பங்கெடுப்பது பற்றி தோழர் சண் இவ்வாறு கூறுகிறார் “இன்று உள்ள நவ காலனித்துவ பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்த கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்துக்கு வந்தாலும் முதலாளத்துவத்தினதும் ஏகாதிபத்தியர்தினதும் காவல் நாயாகவே செயற்படும். இந்த அடக்கு முறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சினையையும் தீர்க்க முடியாது”
சரி. இதைப் படித்ததும் தம்மை மார்க்சியவாதிகளாக கூறிக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியினர் தேர்தலில் எப்படி பங்கெடுக்கின்றனர் என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.முன்னிலை சோசலிசக் கட்சியினரைப் பொறுத்தவரையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் பங்கெடுப்பதாக தோன்றவில்லை. மாறாக தமது கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்குரிய ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர் என்றே தோன்றுகிறது. ஆனால் ஜேவிபியைப் பொறுத்தவரையில் அவர்கள் தாம் இம்முறை அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்றே நம்புகின்றனர்.ஜேவிபி உண்மையில் புரட்சியை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவர்கள் தேர்தல் பாதையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஒருபோதும் அனுமதிக்காது.மாறாக முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதித்தால் ஜேவிபியும் ஆளும் வர்க்கத்தில் ஒருவராக மாறிவிட்டது என்று அர்த்தமாகும்