பிரிட்டனில் பரபரப்பு மிகுந்த தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.
கொளத்தூர் ஆனந்த் குமார் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்!
பிரிட்டனில் தற்போதை பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். அங்கு வரும் ஜூலை 4 ஆம் திகதி பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிட்டனில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. அதில் எந்த கட்சி 326 இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறும்.
எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு பாராளுமன்ற நடைமுறை பின்பற்றப்படும். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்கலாம்.
ஒருவேளை பிரதமர் பதவியில் இருப்பவரால் கூட்டணி கட்சிகளுடன் பேசி ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால், தேர்தல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.
இத்தகைய பரபரப்பு மிகுந்த தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். சென்னை கொளத்தூரை பூர்வீகமாக கொண்டவர் ஆனந்த் குமார். பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.