Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பல்கலைக்கு தகுதி பெற்றும் அனுமதி கிடைக்காத மாணவர்கள் நிர்க்கதியில் - குகதாசன் எம்.பி. சுட்டிக்காட்டு.

.

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் பாடத்திட்டம், கற்பித்தல் முறைமை, ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 

நிதி ஒதுக்கீடு, ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இன்றைய குழுநிலை விவாதத்தில் குகதாசன் வலியுறுத்தினார்.

உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கு தகுதி பெற்றிருந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக சபையில் சுட்டிக்காட்டினார். 

குறிப்பிட்ட தரப்பினருக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். 

இலங்கையின் கல்விமுறை தொழிற் சந்தையுடன் இணைந்ததாக இல்லை, இதன் காரணமாகப் பட்டதாரிகள் தொழிற்சந்தையில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். 

எனவே நாட்டினுடைய பாடத்திட்டங்களை தொழிற்சந்தையுடன் இணைந்ததாக மாற்றியமைக்க வேண்டும் என குகதாசன் வலியுறுத்தினார்.