Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணைக்கு!

.

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28)  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில்  ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் வழக்கு மேலதிக விசாரணைக்காக நாளை (29) வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதிவாதிகளான மோரிஸ் எனப்படும் செல்வராசா கிருபாகரன், சண்முகலிங்கம் சூரிய குமார் மற்றும் தம்பையா பிரகாஷ் எனப்படும் தனுஷ் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தி அவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியது மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் மூவரைக் கொல்ல உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.