Breaking News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; திமுக vs நாதக போட்டியில் வெல்லப்போவது யார்?
,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்தார். ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் முருகன், முன்பு 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் சின்னப் பிரச்சினை காரணமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின்னர், இபிஎஸ் அணியில் இணைந்த அவர், அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் போட்டியை புறக்கணிக்க அதிமுக தலைமை முடிவு செய்தது. ஆனால், சுயேச்சை வேட்பாளராக செந்தில் முருகன் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.