Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வித்தியா படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு

.

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வித்தியா படுகொலை தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் எட்டு வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி மன்றாடியார் நாயகம் ஆயிஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தது.

அதன்பிறகு, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைத்து அமர்வு உத்தரவிட்டுள்ளது.