எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை!
.
”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டினை தெளிவு படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு சந்திரிக்காவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று சந்திரிக்கா தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளார்.
இதேவேளை அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தாம் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் என தெரிவித்த சந்திரிக்கா தனது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.