Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு சிவில் அமைப்புக்களினால் ஆரம்பம்!

மே-18,முள்ளி வாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு இன்று (12) மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கஞ்சி பரிமாறுவோம்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு சிவில் அமைப்புக்களினால் ஆரம்பம்!

மே-18,முள்ளி வாய்க்கால் கஞ்சி வார நிகழ்வு இன்று (12) மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தொணிப் பொருளில் மட்டக்களப்பு சிவில் அமைப்பினால் இவ் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மே-18 என இலக்கம் பொறிக்கப்பட்ட பானையில் கஞ்சி காச்சப்பட்டு வீதியில் சென்றோர்களுக்கு பரிமாறப்பட்டது.அத்துடன் முள்ளி வாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம் என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களும் மக்களின் பார்வைக்கு விநியோகிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது.அந்த வேளை பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை.வாங்குவதற்கு எந்த உணவுப் பொருளும் இருக்கவில்லை.இந் நிலையில்தான் வன்னி நிலப்பரப்பில் மக்கள் தம் உயிர் பிழைப்புக்கென முள்ளி வாய்க்கால் கஞ்சி என்கின்ற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர்.இன்று ஆரம்பிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரமானது எதிர் வரும் மே-18 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.