Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்!

,

பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. 

கத்தியால் குத்திய நபர் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் தாக்குதலுக்கான சூழ்நிலைகள் உடனடியாகத் தெரியவில்லை. 

வியாழக்கிழமை தாக்குதல் பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்ததாக தேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவரை சுற்றிவளைத்து பிடித்த ஆசிரியர்கள்! 

சக மாணவர்களை தாக்கிய மாணவனை ஆசிரியர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று விசாரணை அதிகாரி கூறினார். 

தாக்குதலில் ஈடுபட்ட 15 வயது மாணவர், போலீசார் வருவதற்கு முன்பே ஆசிரியர்களால் தாக்கப்பட்டார் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பயங்கரவாத நோக்கம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

ஒப்பீட்டளவில் பிரான்சில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரிதாக கருதப்படுகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே. அதனால் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.