Breaking News
இந்திய மீனவர்கள் நால்வர் கைது: தீர்வின்றி தொடரும் சட்டவிரோத மீன்பிடி
.
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்க கடற்பரப்பில் கடற்படையினரும் கரையோரப் பாதுகாப்பு பிரிவும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்திய மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்பிடி பரிசோதனை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.