Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரசியல்வாதிகளுக்கு வழங்கிய மதுபானசாலை அனுமதிகளின் விபரங்களை வெளியிடுங்கள், வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது

.

அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் விபரங்களை வெளியிடும்படி பல தடவைகள் நான் கேட்டிருக்கிறேன். தேசிய மக்கள் சக்தி அரசும் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றதென முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்​தெரிவித்தார்.

அரசியல் வழிகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசிடம் சுமந்திரன் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்குவது இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சமூகப் பிரச்சினை எனவும் அவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான உரிமங்களில் அரசியல் தொடர்புள்ள தனிநபர்களின் நிதி ஆதாயத்துக்காக வழங்கப்படுவதாகவும் சுமந்திரன் கூறினார்.