தற்கொலை குண்டுகளை ஏந்திக்கொண்டே ரணிலுடன் இணைந்தோம்
.
தற்கொலை குண்டுகளை ஏந்திக்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தானும் மனுஷவும் களத்தில் இறங்கியதாக உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
”எமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என அறிந்துக்கொண்டே இந்த பணியில் இறங்கினோம். எமது பதவிகளுக்கு அப்பால் நாட்டின் நலனும் நாட்டின் முன் இருந்த சவால்களுமே எமக்கு முதன்மையாக இருந்தன.
ஜனாதிபதியைப் போன்று தானும் மனுஷ நாணயக்காரவும் இன்று முதல் சுதந்திரமாக செயற்படுவோம் என்பதுடன், புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.
தற்கொலை குண்டுகளை ஏந்திக்கொண்டே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக களமிறங்கினோம். ஆனால், இன்று நாட்டையும் காப்பாற்றியுள்ளோம். எம்மையும் காப்பாற்றியுள்ளோம்.
ஜனாதிபதியின் வெற்றிப்பாக பணியாற்ற அதிக காலம் கிடைத்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.