Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பல மொழிகளில் விளம்பரம்! கனடாவில் இனி புகலிடம் கோரிக்கை எளிதல்ல.

.

கனடாவில் இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது என்பது எளிதல்ல என்று கனேடிய அரசாங்கம் உலகளாவிய ரீதியில் எச்சரிக்கை விளம்பரம் ஒன்றினை விடுத்துள்ளது.

மேலும் சுமார் 178,662 அமெரிக்க டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது, ஸ்பேனிஷ் உள்ளிட்ட 11 மொழிகளில் இவ் எச்சரிக்கையானது விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைவடைந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தினுடைய, அரசியல் தந்திரம் என்று ஒரு சில தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இக் குறித்த விளம்பரத்தில், கனடாவில் இனி புகலிடம் கோருவது எளிதல்ல. தகுதி பெறுவத்ற்கு கடுமையான வழிமுறைகள் உள்ளன. மேலும் முடிவெடுக்கும் முன்னர் அவை குறித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவில் , புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்புக்களை அதிகம் வழங்கி வரும் கனேடிய அரசாங்கம், தற்போது புலம்பெயர் மக்களை உள்வாங்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன் டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு தற்காலிகமாக குடியேறும் மக்களையும் தடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்.