Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிறிலங்கா- சம்பூர் அரச பயங்கரவாத காவல்துறையின் மிலேச்ச தனமான செயற்பாடு.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிறிலங்கா- சம்பூர் அரச பயங்கரவாத காவல்துறையின் மிலேச்ச தனமான செயற்பாடு.
சிறிலங்கா- சம்பூர் அரச பயங்கரவாத காவல்துறையின் மிலேச்ச தனமான செயற்பாட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை. தற்போது தமிழ்மக்கள் முள்ளிவாய்க்கால் வாரத்தை கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி, நினைவு கூருகிறார்கள்.இது தமது இழந்த உறவுகளை நினைவு கூரும் செயல் மட்டுமல்ல,உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கடந்து வந்த பேரவலத்தை. இவற்றின் மத்தியிலும் உயிர் பிழைத்த அதிசயத்தை மீட்டுப் பார்க்கும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் (கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40). நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22)) சிங்களப் பொலிசாரால் இரவு வீடு புகுந்து துன்புறுத்தி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். சிறிலங்கா பொலிசாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.மேலும் இது தொடர்பில் பெண்கள்அமைப்புகள் தமது கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.மேலும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை சர்வதேச நாட்டுத் தூதுவர்கள் உணர்ந்து சிறிலங்காவிற்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.