Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிழக்கில் 6 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டும்

.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எனவே தமிழர்களின் விகிதாச்சார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் அனைவரும் அணிதிரளுமாறு கரம் கூப்பி அழைக்கின்றோம் என ஈ.பி.ஆர். எல்.எப். கட்சியின் சிரேஸ் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடக மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வீதாசார அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதியும். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகள் உட்பட 6 தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை ஏதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும்.

எனவே குறிப்பாக புதிய இளைஞர் சமூகம், படித்த சமூகம். சமூகசேவையில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 குழுக்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிடப் போகின்றனர் அதில் தமிழ்த் தேசியத்தில் நாட்டமில்லாத அனைவரும் தமிழர்களின் விகிதாச்சாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தைத் தடுப்பதற்காக கைக்கூலிகளாகப் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த கைக்கூலிகளின், ஏஜன்டுகளின் மாயவலையில் விழ்ந்துவிடாமல் 4 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதேவேளை தலைமைகளை வழங்கவும், எதிர்வரும் காலத்தில் தமிழ்த் தேசியத்தில் நாட்டமுள்ள கட்சிகளுடன் பொதுவான ஒரு இனக்கப்பாட்டிற்கு வருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவே எங்களுடன் அனைவரும் அணிதிரளவேண்டும்.

இன்று மாவட்டத்தை பொறுத்தளவில் தமிழர்களா? கட்சிகளா? என்ற விடையத்தில் மாவட்ட மக்கள் அதிகமாகத் தமிழர்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என மிகவும் அக்கறையாக இருக்கின்றனர் எனவே அனைவருக்கும் அறை கூவல் விடுக்கின்றோம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க நாங்கள் தயாரக இருக்கின்றோம் அனைவரும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என்றார்.