Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அநுர அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ள சஜித் பிரேமதாச!

,

அநுர, தாம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத புதிய அரசாங்கம், தம்மை விமர்சிப்போரை அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

களனி பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசாங்கம் எவ்வாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர் அவரின் வீட்டுக்கு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்கின்ற வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது. இது இந்த நாட்டில் காணப்படும் அடிப்படை உரிமையாகும். ஆனால் இந்த அரசாங்கம் இதையும் மீறி நடந்து வருகின்றது.

இந்த நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை உள்ளது. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும். பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும். அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவுகளை நீக்குமாறு யடவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இளைஞர் ஒருவர் யடவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். 

அதன்படி, இன்று (17) இரு தரப்பினரையும் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.