Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன்.கங்கனா ரணாவத்.

தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

கங்கனா முன்னிலை – ‘இமாச்சல் எனது ஜென்மபூமி’ என நெகிழ்ச்சி.

இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன் என மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரணாவத் தனது இல்லத்தில் பிரார்த்தனை செய்தார். சமீபத்திய இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை விட 37,033 வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் கூறும் போது, “மும்பைக்கு நான் செல்வதை பொறுத்த வரையில்… இமாச்சலப் பிரதேசம் எனது ‘ஜென்மபூமி’, நான் இங்கிருந்து மக்களுக்கு சேவை செய்வேன். அதனால், நான் வேறு எங்கும் செல்லப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்