போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்
.
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்க தமது அரசாங்கம் முயலாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.