உக்ரைன் போரில் புடின் வெற்றி பெற மாட்டார்: உறுதியாக சொல்கிறார் ஜோ பைடன்
.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர் அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ‘அமைதியாக இருங்கள்’ என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கண்டிப்புடன் தெரிவித்தார்.
உக்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் இதற்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ‘நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதித்தால், அது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம். நாங்களும் உரிய பதிலடியை கொடுப்போம்’ என ரஷ்யா ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்தனர். புடின் போர் அச்சுறுத்தல் பற்றி கேள்வி எழுப்பிய நிருபருக்கு, ‘நான் பேசும் வரை அமைதியாக இருங்கள் என்று நான் சொல்கிறேன். சரியா?. நல்ல யோசனையா? என பைடன் கோபத்துடன் பதில் அளித்தார்.
ஆனாலும், நிருபர் தனது கேள்வியை தொடர்ந்து எழுப்பியதால், பைடன் அவரை மீண்டும் கண்டித்தார், ‘நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நான் இங்கே ஒரு அறிக்கையை வெளியிடப் போகிறேன் சரியா? என்றார். புடினைப் பற்றி நான் அதிகம் யோசித்து பார்த்தது இல்லை.
உக்ரைனுடனான போரில் புடின் வெற்றிபெற மாட்டார் என்பது தெளிவாகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனை காக்கும் வகையில் உதவ நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.