Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு.

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள், பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு.
எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21)  நடைபெற்றது. 

இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன் கடந்த தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சுமூகமாகவும் வினைத்திறனாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். 
மேலும், கடந்த தேர்தலில் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் மற்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.