Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அதிபர், ஆசிரியர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. 
நிலவிய அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனர்த்த நிலைமையினால் பெருமளவான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

பிள்ளைகள் தொடர்பில் தற்போது 25,000 ரூபா பணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
தற்போது சுரக்ஷா காப்புறுதி முறைமை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஊடாக பிள்ளைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். 

ஆனால் அதன் ஊடாக பிள்ளைகளுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. 
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் கடன்களைப் பெற்றுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். 

எனவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு சலுகை அடிப்படையிலான முறையில் செயற்பட வேண்டும். 
அரசாங்கம் தலையிட்டு கடன்களை இரத்து செய்வதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.