இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்!
கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) மீது ஈரான் தாக்குதல்!
இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக பாரிய சேதங்கள் இல்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலை அந்த நாட்டின் 60சதவீத டீசல் தேவையையும், 50 சதவீத பெற்றோல் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) மீது ஈரான் தாக்குதல்!
கத்தாரின் LNG (Liquefied Natural Gas) முக்கிய நிலையமான ராஸ் லஃபான் (Ras Laffan) மீது ஈரான் நடத்திய தாக்குதல், உலகளாவிய எரிவாயு சந்தையின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
தாக்குதலுக்கு முன், கத்தார் LNG உற்பத்தி முழு திறனுக்கு திரும்ப 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என கணிக்கப்பட்டது.
இப்போது சேதத்தின் அளவு மற்றும் பழுது பார்க்கும் காலத்தைப் பொறுத்து, இந்த காலம் மேலும் நீளக்கூடும். ஒவ்வொரு மாத தாமதமும் உலகளாவிய LNG கிடைப்பில் சுமார் 1.5% குறைப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல், உலக எரிசக்தி சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!
சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன், வளைகுடா நாடுகளை நேரடியாக போருக்கு இழுக்கும் அபாயமும் உருவானது.
உலக மசகு எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஏற்கெனவே முடக்கியுள்ள ஈரான், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்ததால், உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க, சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியைச் செங்கடல் வழியாக மாற்றியிருந்தது.


