வாக்கெடுப்பு நிறைவுக்கு வந்தது.
கொழும்பு பஞ்சிகாவத்தை பாலர் பாடசாலையில் தனது வாக்கினை செலுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப. 02.00 மணி வரை 44.03℅ வீதம் வாக்களிப்பு. உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06) தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப 02.00 மணி நிலவரப்படி 44.03℅ வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (06) மதியம் 01.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியின் இலங்கை பயணத்துக்கு "Embraer Legacy 600" என்ற வணிக ஜெட்ஐ வியட்நாம் அரசாங்கம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.*
உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து மியன்மாரிலிருந்து இன்று (06) முற்பகல் நாடு திரும்பிய ஜனாதிபதி, கொழும்பு பஞ்சிகாவத்தை பாலர் பாடசாலையில் தனது வாக்கினை செலுத்தினார்.
வாக்கெடுப்பு நிறைவுக்கு வந்தது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்புக்கள் இன்று காலை 7.00 மணியில் ஆரம்பிக்கப்பெற்று மாலை 4.00 மணியுடன் நிறைவுற்றுள்ளது.
வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்கின்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்படுகின்றது.
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிக்கை.
-உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் உடனுக்குடன் உங்களுக்கு வழமை போன்று தருவதற்கு நாமும் ஆயத்தமாக உள்ளோம், முடிவுகளை எதிர்பார்த்து எம்முடன் இணைந்திருங்கள்..
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் மாவட்ட ரீதியில் பதிவான வாக்குவீதம்,
Jaffna 56.6℅
Mullaitivu - 61.32%
Mannar - 70.15%
Vavuniya - 59.65%
Kilinochchi - 61%
Nuwara-Eliya - 60%
Batticaloa - 61%
Badulla - 60%
Anuradhapura - 60%
Polonnaruwa - 64%
Monaragala - 61%
Kegalle - 58%
Kalutara - 61%
Galle - 63%
Digamadulla - 63%
Trincomalee - 67%
Colombo - 52%
Matara - 58%
Matale - 62%
Rathnapura - 60%
Puttalam - 55%