Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்!

.

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 11 ஆம் திகதித காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார். 

"இடமாற்றப் பட்டியல் பிரச்சினைகளில் சுகாதார அமைச்சு முறையாகத் தலையிடவில்லை என்றால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். 

சுகாதார அமைச்சுக்கு நாங்கள் ஒரு காலக்கெடுவை வழங்கியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். 

ஆனால் இந்த அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். 

ஏதேனும் காரணத்தால் 11 ஆம் திகதி காலை 8.00 மணிக்குள் இது தொடர்பாக சுகாதார அமைச்சு நேர்மறையான தலையீட்டைச் செய்யத் தயாராக இல்லை என்றால், அதன்படி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்." என்றார்.