Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே“: போராட்டத்தில் குதித்த யாழ்ப்பாண மீனவர்கள்!

.

 

இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சக்கு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றை மீனவர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.