Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலை!

மக்களை ஒன்றுபடுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்.

தலைவர் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்றுபடுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கல்லில் நார் உரிக்கும் செயற்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஒன்றுபட போவதில்லை. பதவிப் போட்டிகளைத் தீர்க்க முடியாத கட்சிகள் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலையாகும்.
ஆக மொத்தத்தில் சஜித், ரணில், அனுர, பகிஷ்கரிப்பு, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பஞ்ச நிலை முடிவுகளைத் தான் மக்கள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். மக்களின் இந்த முடிவுகளுக்கு தமிழ்க் கட்சிகளைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. பட்டுணர்ந்தும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட மறுப்பது துரதிஸ்டமானது. தமிழ் மக்களின் சாபக்கேடானது. அம்பாறை பறிபோய்விட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் பறிபோய்விடும். இப்படியிருக்க ஜனாதிபதித் தேர்தலில் இராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு முட்டாள் தனமான முடிவுகளை எடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.