Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்பு; யாழ்.பல்கலை துணைவேந்தர் கருத்து..!

.

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கத்திக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது அதிகாரிகளால் மாகாண சபை சிறப்பாக நடத்தப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையால் நிதியுதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 1984ஆம் ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் படித்த காலம் மிக நெருக்கடியானது. அதைப்போலத்தான் அவர் பணிக்குச் சேர்;1991ஆம் ஆண்டு காலமும் நெருக்கடியானது. அவர்கள் நெருப்பாற்றை நீந்திக் கடந்துதான் பணியாற்றினார்கள். 

வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் கடமையுணர்வுமிக்கவர்கள். வடக்கு மாகாணத்தின் பலமே அவர்கள்தான். இப்போதுதான் வடக்கின் ஆளுநரைக்கூட யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடித்திருக்கின்றார்கள். அரசியல்வாதிகளையும் கொழும்பிலிருந்து கொண்டுவரும் ஒரு காலம் இருந்தது. எங்களால் செய்ய முடியாது என்ற எண்ணம் இனியாவது மாற்றப்படவேண்டும். 

வடக்கு மாகாண ஆளுநராக வேதநாயகனை இந்த அரசாங்கம் தேர்ந்தெடுத்தன் ஊடாக வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின், தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு ஒரு படி மேலேகூடி விட்டது. வடக்கு ஆளுநரும் அவரது அணியும் இந்த மாகாணத்தில் சிறப்பாக வேலை செய்கின்றார்கள். அவர்களை அப்படியே சேவை செய்யவிட்டால் போதும் என நினைக்கின்றேன்.

மாகாண சபை இல்லாமல் இருப்பது நல்லம்தான். இல்லாவிடின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சத்தம் போட்டுக்கொண்டிருப்பதைப்போல அங்கும் சத்தம்தான் போட்டுக்கொண்டிருப்பார்கள். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் 'மாஸ்ரர் பிளான்' இருக்கா என்று கேட்பார்கள். ஆனால் இந்த அதிகாரிகள்தான் இங்கிருந்து எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்றார்.