Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தேசியப் பட்டியல் விவகாரத்தில் கடும் குழப்பம் - ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அக்கட்சியின் வஜிர அபேவர்தன நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தேசியப்பட்டியல் நியமனம் வழமைக்கு முரணானது என தெரிவித்திருந்தார்.

இது கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினர் நேற்று ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும், இந்த முடிவை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி  தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் ஏதேனும் எதிர்ப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கான பேச்சுவார்த்தை கொழும்பு 7 மலர் வீதி கட்சி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது