Breaking News
மட்டு சத்துருக்கொண்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகியின் தலைமையில் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி
மட்டு சத்துருக்கொண்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு பனிச்சையடியில் ( சத்துருக்கொண்டான் ) உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு கஞ்சி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
எனினும் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படாத நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.