Breaking News
இரா.சம்பந்தன் மறைவு; மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியினரால் உணர்வுபூர்வ அஞ்சலி
.
மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று(01) மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் களுவாஞ்சிகுடி அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.