Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டம்.

எதிர்வரும் ஆகஸ்ட் 30 இல் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.

எதிர்வரும் ஆகஸ்ட் 30 இல் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் கிளிநொஞ்சி மாவட்டத்தில் 
மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்திற்கு  எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கனகரஞ்சி மற்றும்
செயலாளர் லீலாதேவி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். அதே வேளை ஏனைய
மாவட்டங்களான திருகோணமலை மற்றும் யாழில் நடைபொறும் போராட்டங்களிலும் பங்குபற்றுமாறும்
வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
30 இற்கு மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள், மற்றும் கையளிக்கப்பட்ட, இழுச்துச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட , சரண்டைந்த உறவுகளுக்கு சர்வதேச
நீதி வேண்டி போராட்டத்திற்கான அழைப்பில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் எனைய
அமைப்புகள், சங்கங்கள், பொதுமக்கள் அனைவரையும் 
பங்குகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  புலம்பெயர் தேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளுக்கான போராட்டங்களில்
அந்தந்த நாடுகளில் வலுச்சேர்த்து  அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஊடகச் சந்திப்பு நேற்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.