நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை - ஜெனரல் சவேந்திர சில்வா?
.

2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் தனது உத்தியை ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
" நான் 2022 மே 31 அன்று ஓய்வு பெறுவதற்கு ஏழு மாதங்கள் எஞ்சியிருந்தன. எனினும், அதிகாரிகள் என்னை உத்தியோகபூர்வமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து பாதுகாப்பு படைகளின் பிரதானியாக மாற்றினர்.
சில நாட்களின் பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்ததுடன், அந்த நேரத்தில் நான் அரசாங்கத்தின் அனுமதியுடன் வெளிநாட்டில் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன்.
2022 போராட்டம் ஒரு உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை.
ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர் போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்று கேட்டார்.