Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண்!

கை முறிந்த நிலையில் யாழ் போதனாவில் சிகிச்சைக்காக மாணவன்.

மாணவனை மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பெண் – கை முறிந்த நிலையில் யாழ் போதனாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வட்டுக்கோட்டை இந்து மாணவன்.

தரம்  7 இல் கல்விபயிலும் பாடசாலை மாணவன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் –
சிவரூபன் லோஷனன் என்ற 11 வயதுடைய மாணவன் வழமை போன்று தனது துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
 பாடசாலையின் அருகாமையில் குறித்த சிறுவன் சென்ற நிலையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் தன்னை மோதியதில் தான் துவிச்சக்கர வண்டியுடன் வீதியில் வழு்ந்ததாக சிறுவன் தெரிவித்தார். 

அத்துடன் விபத்தில் சிக்குண்டு காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தன்னை பெருட்படுத்தாது அந்தப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வீழ்ந்துகிடந்த தன்னை தனது பாடசாலையின் முன்பாக வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிரேஸ்ர மாணவர்கள் ஓடிவந்து தூக்கி தனது நிலையை அவதானித்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவன், தனக்கு பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து தனது பெற்றோருக்கு தகவல் வழங்கியதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் குறித்த விபத்தில் மாணவனின் கை முறிந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நிறைவுறும் நேரங்களில் பொலிசார் வீதிக் கடமையில் வழமையாக இருந்துவரும் நிலையில் சில நாள்களாக அந்த செயற்பாடுகள் இல்லாதுள்ளமையை அவதானிக்க முடிவதாக மாணவர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பித்தக்கது.