பலதும் பத்தும்:- 04,04.2025 - டிரம்பிடம் இலங்கையும் சிக்கியது – 44 வீத வரி விதிப்பு!
யாழில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள்- உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் சந்திப்பு..!

டிரம்பிடம் இலங்கையும் சிக்கியது – 44 வீத வரி விதிப்பு!
உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில்இ அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதிசெய்துள்ளது.
அரச நிறுவனத்தில் மில்லியன்களில் பண மோசடி!
பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றியதன் ஊடாககாசோலையை பயன்படுத்தி 27இ031இ024இ15 ரூபா பண மோசடி செய்ததாக மஹரகமஇ நாவின்னஇ பழைய கொட்டாவ வீதியில்அமைந்துள்ள இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் கடந்த 20 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன்படிஇ நடத்தப்பட்ட விசாரணையின்படிஇ பணத்தை மோசடி செய்த சந்தேக நபரும்இ அவருக்கு உதவிய இரண்டு பெண் சந்தேகநபர்களும் கடந்த 1 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என்றும்இ ஏனைய இரு பெண்களும் 25 மற்றும் 32 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பிரதான சந்தேகநபர் மற்றும் பெண்ணொருவர் நேற்று (02.04.25) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டுஇ 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
யாழில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள்- உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் சந்திப்பு..!
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றவேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இன்று முன்னாள்இராஜாங்க அமைச்சரும்இ ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிமாவட்டங்களுக்கான அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வுநடைபெற்றது. இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனஇ பொதுச் செயலாளர்தலதா அத்துகோரளஇ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ்காரியவசம்இ வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஐதேகவின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில்இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்இ உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின்செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன்இ எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக்கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய்நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அத்தோடுஇ தினசரி 175 முதல் 200 பேர் வரை இருதய நோயாளர்களாக அடையாளங் காணப்படுவதாகவும் வைத்தியர்சுட்டிக்காட்டியுள்ளார். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இருதய நோய்க்குவழிவகுப்பதாக வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
யாழில் நேர்ந்த துயரம் ; மனைவியுடன் தகராறால் குடும்பஸ்தர் உயிரிழப்பு.
யாழில்இ தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர்ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்குஇ உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரேஇவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்இ கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும் மனைவியும்வேலைக்கு செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்கு தானே தீ வைத்துள்ளார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்பிறேம்குமார் மேற்கொண்டார்.
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர்கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த விடயம்தொடர்பில் மேலும் தெரியவருவது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில்வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்இ இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (1) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடுகடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தஇரண்டு படகுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்இ
கைது செய்யப்பட்ட நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம்மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை!
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேனஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதைஅடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2இ080இ500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (ஊஐயுடீழுஊ) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்கஅமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் எட்டாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அண்மையில்கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர்இ புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில்வைக்கப்பட்டார். இந்நிலையில்இ குறித்த வழக்கு இன்று (01.04.25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் எட்டாம்திகதி வரை மீண்டும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அளித்ததகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.