Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கறுப்பு ஜூலை கலவரம்: நீதிக்கான போராட்டம் தொடரும்

.

கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும் , தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ நிலைநாட்டப்படவில்லை.

இதுகுறித்து அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட உமா குமாரன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

அப்பதிவில் அவர் கறுப்பு ஜுலை கலவரங்களை அடுத்து தமிழ்மக்கள் உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும் அவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்கள் என்ற போதிலும்இ போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதன்படி கறுப்பு ஜுலை கலவரங்களின்போது இடம்பெற்ற கொடுமைகள் குறித்து தனது பெற்றோர் தனக்குக் கூறியிருப்பதாக எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ள உமா குமாரன், அக்கலவரங்களினால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூருவதாகவும், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.