Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தர்மபுரம் ஆயுர்வேத வைத்தியசாலையை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் - பொது அமைப்புக்கள்

ஆயுர்வேத வைத்தியசாலை : கால்நடைகளின் தங்குமிடம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையினரால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடம் கடந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாது கால்நடைகளின் தங்குமிடமாகவும் பட்டறை காடாகவும் காட்சியளிக்கின்றது.

இவ் வைத்தியசாலை ஆனது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16கிராம மக்கள் பயன் தரக்கூடிய வகையில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலை என புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இருந்த போதிலும் இன்றுவரை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இதனை மிக விரைவில் மக்களினது பாவாடைக்கு கையளிக்க வேண்டுமென இப்பகுதியில் வாழும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது அதிகமானோர் ஆயுர்வேத வைத்தியசாலையே நாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது புதுக் குடியிருப்பு பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே அதிகளவான பணத்துறை செலவழித்து தனியார் வாகனத்தை வாடகைக்கு பெற்று, அப்பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது பகுதியில் ஆயுர்வேத வைத்திய சாலையை வைத்துக்கொண்டு வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது ஆயுர்வேத வைத்திய சாலையை எமது பயன்பாட்டுக்கு விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.