Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம் அது!

சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை.

செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம்.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வாய்பை மேற்கொள்வதற்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதிமூலம் தொடர்பில் உறுதியான தகவல்கள் நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன், அகழ்வுகளுக்காக துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவை அழைப்பது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இவற்றை ஆராய்ந்த மன்று, வழக்கை நாளைமறுதினம் வரை தவணையிட்டுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பான கட்டளைகள் நாளைமறுதினம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சனும், ரனித்தா ஞானராஜாவும் முன்னிலையாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீள்பதிவு:
ஒரு நாள் கேப்டன் லலித் கேவா என்னை அழைத்தார் மண்வெட்டியை விரைந்து எடுத்து வருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக்கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்த போது அங்கு ஆடையின்றி ஒரு பெண்ணொருவர் நிர்வாண கோலத்தில் நின்றார். கேப்டன் லலித் கேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார்,பின்பு நான் எடுத்து வந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருட்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கி காயப்படுத்தினர். இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர். அவர்கள் இருவரும், முன்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்கள். இது சோம ரத்தின ராஜபக்ஷவின் வாக்குமூலம். உண்மையில் யார் இந்த சோமரத்தின ராஜபக்சா, எதற்கு அவன் இப்படி ஒரு வாக்குமூலத்தை அளித்தான் என்ற கேள்விகள் உங்களுக்கு இயல்பாகவே எழுவது புரிகிறது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியை கடந்து வந்த ஒவ்வொரு தமிழ்க் குடிகளினது நெஞ்ச குழியினுள் இந்த கேள்விகளுக்கான பதில், தீர்வு இன்றி அங்கலாய்த்து கொண்டிருக்கும் செம்மணி இன வழிப்பு செயற்பாட்டின் ஆரம்பம்"அது.