Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தர்க்கம் செய்த முன்னாள் நபர் மீது தேவானந்தாவின் கூலிபடை கோர தாக்குதல்!

இதனால் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 02 மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட  டக்ளஸ் தேவானந்தா மீது அப்பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர்  அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

ஊர்க்காவல் துறை கரம்பன் பகுதியில் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் முன்னாள் ஈ.பி.டி.பி  உறுப்பினரான நபர் ஒருவர் சில கருத்துக்களைக் கேட்டு டக்ளஸ் தேவானந்தாவோடு  தர்க்கத்தில் ஈடுபட்டார்.  

பொதுமக்கள் முன் அவரது தர்க்கத்துக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய  டக்ளஸ் தேவானந்தாவின் நிலைமையைக் கண்டு அவரது அடியாட்கள் அந்த  முன்னால்  ஈ.பி.டி.பி  உறுப்பினரை அவ்விடத்தில் இருந்து அகற்ற முற்பட்டுள்ளனர்.

பல சிரமங்களுக்குப் பின்னர் அவரை அந்த இடத்திலிருந்து நகர்த்திய பின்னர், டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பரப்புரை நிறைவுற்ற கையோடு பழைய கிழவி கதவைத் திவாடி என்பது போல் அதே வேகத்தில் அதே பாணியில் வானில் சென்று அவரது வீட்டில் அவரை கோரமாக தாக்கி சென்றுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

என் பி பி அரசும் இதுக்கு ஆதரவு வழங்குகின்றதா?  ஆளுகின்ற சிங்கள கட்சிகளோடு, அதிகாரம் உள்ள சிங்கள கட்சிகளோடு சேர்ந்து தமிழ் மக்கள் மீது பலவிதமான தீவிரவாத செயல்களை, தாக்குதலை  டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டது தெரிந்ததே. 

அவருடைய அணியில் இருந்தவரே அதை தட்டிக் கேட்கின்ற போது பதில் கூற முடியாத டக்ளஸ் தேவானந்தாவின் கண் அசைவுக்கு அவருடைய அடியாட்கள் அடிபணிந்துள்ளனர்.

காலம் காலமாக தமிழினத்தின் மீது இவ்வாறான ஒட்டுக் குழுக்கள் மூலமாகவே ஓட்டுக்களை பிரிப்பதும் ஒடுக்குவதுமா  செயல்கள் நடந்து வருகின்றது.